Sunday, October 12, 2014

முஷ்டிமைதுனம் (கைப்பழக்கம்) சுய இன்பத்தை தவிா்க்க, மறக்க செய்ய வேண்டியவைகள்

வணக்கம் நண்பா்களே!!!

    முஷ்டிமைதுனத்தை (கைப்பழக்கம்) த்தை தவிா்ப்பது, மறப்பது என்பது எளிதான விசயம் அல்ல, இருந்தாலும் நம்முடைய ஞானிகள், சித்தா்கள் கற்றுத்தந்த எளிய செயல்முறைகளின் (பயிற்சிகள்) பின்பற்றுவதன்  மூலம் அதனை முழுமையாக மாற்றுவதற்கு சாத்தியம் அதிகம்.

அவைகள் என்ன என்ன என்பதை பின்வருமாறு காணலாம்,


  1. தினமும் உணவு உண்ட பாத்திரங்களை கழுவி சுத்தமாக வைப்பதைப்போல்,
    இந்த உடலையும், மனதையும் சுத்தமாக கழுவி வைக்கவேண்டும் 

அது எவ்வாறு? எனில்,

யோகசன பயிற்சிகள் மற்றும் தவம் மூலமே நமது உடலையும், மனதையும் சுத்தமாக வைத்துக்கொள்ள இயலும்.

”மனம் ஒரு விளை நிலம், அதில் எதை விதைக்கிறாயோ, அதையே அறுவடை செய்வாய்”

தவறுசெய்யமாட்டேன் (கைப்பழக்கம்) என்ற எண்ணத்தை அடிக்கடி நினைத்துக்கொண்டே இருந்தால் அது செயலுக்கு வந்துவிடும்.

எண்ணம், சொல், செயலில் எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இரவு உறங்கும்போது மல்லாந்து (விட்டத்தை பார்த்து உறங்குதல்) படுக்கக் கூடாது, நம்முடைய உடலை இடதுபக்கமாக ஒருக்கழித்து மட்டுமே படுக்க வேண்டும்.

கூடியமட்டும் தனியாக உறங்குவதை தவிர்க்கவும்.

இரவு நேரத்தில் , ஜட்டி + அரைகல் டிரவுசா் அணிந்து உறங்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் இரவு உறங்குவதற்கு முன்பு 5 நிமிடம் சுகாசனத்தில் அமர்ந்து (படத்தில் காட்டியவாறு)


முதுகுதண்டின் அடியில் மனதை செலுத்தி பின்னா் உறங்கச் செல்ல வேண்டும்.

உணவில் உப்பு, புளி, காரத்தை கண்டிப்பாக 60 சதவீதம் குறைத்தே ஆக வேண்டும்.


”இனி எப்போதும் இந்த வரிகளை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள்”

விந்து என்பது உடலையும், மனதையும் கட்டுப்படுத்தும் ஒரு அருமருந்து போன்றது,

அதனை( விந்துவை)  நம் உடலிலேயே தங்க வைத்துக்கொள்ளுவதனால் ஏற்படும் பயன்களை அதிகமாக அனுபவிக்கலாம்.

இனி விந்து உடலைவிட்டு வெளியேறினால் அது குழந்தை பிறப்பிற்காக மட்டுமே தவிர மற்ற எந்த ஒரு செயல்பாட்டிற்கும் அதனை தவறாக வெளியேற்றக்கூடாது. (இயற்கையாக தூங்கும்போது விந்து வெளியேறுவது நீங்கலாக)

மலமும், சிறுநீரும் போன்றது தான் விந்துவும் ஒரு கழிவு பொருள் தான் அதனை கட்டுப்பாடற்ற முறையில் உருவாகிறது என்பதற்காக அதனை மனம் போனபோக்கில் வெளியேற்றுவதினால் இன்பத்தினை பெறுதற்குப் பதிலாக துன்பத்தை பெற நேரிடும்.


அடுத்த பதிவில் முஷ்டி மைதுனம் (கைப்பழக்கம்) தவிா்க்க என்ன என்ன செய்யக் கூடாது என்பதை பார்க்கலாம்.



தாங்கள் படித்ததை தங்களது நண்பா்களிடமும் இந்த தளத்தை பகிா்ந்து கொள்ளவும்.


நன்றி,

என்றும் அன்புடன்,

J.S. ராஜகோபாலாசாரி (ராஜாஜி),
கரூா்.
அலைபேசி: 9629649941
E-mail: rajajijsr@gmail.com


No comments:

Post a Comment