மனிதகுலம் நல்ல உடல் நலத்தோடும், மனவளத்தோடும் வாழ்ந்து, பிறவிப்பயனை (மரணமில்லா பெருவாழ்வு, மீண்டும் பிறவா நிலை) எய்துவதற்காக சித்தா்கள் மற்றும் ஞானியா்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்த யோகா (அ) யோகம்.
யோகம் என்றால் உடலும் மனமும் லயம் ஆதல் ஆகும்.
லயமாதல் என்றால் இணைதல் ஆகும். உடலும் மனதும் இணைந்து செய்யப்படுகின்ற பயிற்சியே யோகசனப்பயிற்சிகள் ஆகும்.
இவைகள் முறையாக குரு மூலம் கற்றுக்கொள்வது மிகவும் சாலச்சிறந்தது.
ஏன் இந்த யோகப்பயிற்சிகள் செய்யவேண்டுமென்றால், அதீத விஞ்ஞான வளா்ச்சி கண்ட இந்த விஞ்ஞான யுகத்தில் உடலுக்கு உழைப்பு என்பது மிக மிக குறைந்துவிட்டது.
நோய்கள் எல்லாம் உள்ளே புகுந்து ஆட்டம்போட ஆரம்பித்துவிட்டன. இதனால் அந்நோய்களின் மூலம் நாம் பல வகைகளில் மருத்துவரிடம் பணத்தை இழந்துகொண்டு இருக்கிறோம்.
நோய்கள் நமது உடலினுள் வரவிடாமல் தடுக்கவும், வந்த நோய்களை விரட்டவும் ஆரோக்கியமான மற்றும் ஊனமற்ற குழந்தைகளை இந்த சமுதாயத்திற்கு வழங்கவும், மற்றும் மனித ஆயுள் முழுமை 120 ஆண்டுகள் வாழவும் இந்த யோகப்பயிற்சிகளால் மட்டுமே சாத்தியப்படுகின்றன.
ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள், தற்பொழுது மனித ஆயுள் 60 -70 ஆக உள்ளது. இதையும் மீறி வாழும் மனிதர்களை மக்கள் கண்டால் ஆச்சா்யமாக பார்க்கின்றனா்.
இதனை மாற்ற யோகசன பயிற்சியால் மட்டுமே முடியும்.
யோகசனங்களில் மொத்தம் 500க்கும் மேற்பட்ட ஆசனங்கள் உள்ளன. அவைகளை நன்கு வடிகட்டி (இந்த வேகமான உலகில் ஈடுகொடுக்கவும், செம்மையாகவும் வாழவும்) வெறும் 35 ஆசனங்கள் மட்டும் செய்தால் போதுமானது.
அந்த 35 ஆசனங்களில் குறிப்பிட்ட சிலவற்றை மட்டுமே பயன்படுத்தி, மருத்துவா்களால் கைவிடப்பட்ட (கேன்சா், மூட்டுவலி, உடல் பருமன், ஆண்மையின்மை, விந்து நீா்த்துபோதல், ஆஸ்துமா மற்றும் பல......) நோய்களை குணப்படுத்தலாம்.
நன்றி,
என்றும் அன்புடன்,
J.S. ராஜகோபாலாசாரி (ராஜாஜி),
கரூா்.
அலைபேசி: 9629649941
E-mail: rajajijsr@gmail.com