Monday, December 12, 2016

மிளகில் உள்ள அற்புத மருத்துவக் குணங்கள்!!


பண்டைய காலங்களில் சிறந்து விளங்கிய கடல் வியாபாரத்தில் தங்கம் போன்று விலை மதிக்க முடியாத ஒன்று மிளகு.

மிளகை வீணடித்தால் உப்பு போட்டு அதில் நாள் முழுவதும் மண்டியிட வைக்கும் தண்டனை போர்ச்சுகல் நாட்டில் நடைமுறையில் இருந்தது. அப்படிப்பட்ட மிளகில் பல அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.

சளித்தொல்லை:

மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும். அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும். அதேபோல், கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும்.

பல் வலி:

மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும். பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.

தலைவலி:

மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். மிளகை சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும்.

ரத்த சோகை:

கல்யாணமுருங்கை இலை, முருங்கை இலை, மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகும்.

பசியின்மை:

ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து, அதனுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிறு உப்பசம் குணமடையும். மிளகு வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையது.

ரத்த சுத்திகரிப்பு, நோய் எதிர்ப்பு:

மிளகு உணவை எளிதில் செரிக்க வைக்கும் தன்மை கொண்டது. மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மிளகு ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.

http://tamil.samayam.com/

எனிமா கருவி - நோய்கள் நீங்க எனிமா"

"

நாள்பட்ட நோய்களின் தீவிரத்தை பெருமளவில் குறைத்து, பலருக்கு முழு நிவாரணமும் தரவல்ல இயற்கை மருத்துவ முறை.

பல நோய்களையும் நமது உடல்தான் தீர்க்க வேண்டும் என்பது இயற்கை மருத்துவத்தின் முடிந்த முடிவு.

அவ்வாறு உடல் செயல்படுவதற்கு நம் குடலைச் சுத்தம் செய்து கொள்வது இன்றியமையாதது

"குடலைக் கழுவி உடலை வளர்"

நமக்கு வரும் பல்வேறு நோய்களில் பல மலச் சிக்கலை அடிப்படையாக வைத்தே வருகின்றன என்னும் கருத்து உண்டு.

அது உண்மையும்கூட.

அதனால் காலாகாலத்தில் வெளியேற வேண்டிய கழிவுகள் உடலுக்குள் தங்கும் நேரம் அதிகமாவதால் உடம்பிலும் ரத்தத்திலும் தேவையற்ற கழிவுகள் கலந்து நோய்களாக மாற்றமடைகின்றன.

அதனால் பெரும்பாலோருக்கு முதலில் வருவது பைல்ஸ் மூலநோய் ஆகும்.

அந்த நோய்க்கு முன்னதாகப் பலகாலமும் அதற்குச் சிகிச்சை செய்துகொண்டே பலகாலமும் துன்பப்படுபவர்கள் ஏராளம்.

எனவே எந்தக் காரணத்தைமுன்னிட்டும் மலச்ச சிக்கலுக்கு இடம்கொடுக்கவே கூடாது.

ஆனால் அதனால் அனேகம் பேர் சிரமப்படுவதைப் பார்க்கலாம்.

நமது நண்பர்களும்கூட இருக்ககூடும்!

மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் இருப்பவர்கள் உடனடியாகச் சிரமத்தைக் குறைத்துக்கொள்ள எளிய முறை உள்ளது.
அது இயற்கையான முறை.

அதுதான் இயற்கை எனிமா!

இதை அஹிம்சை எனிமா என்றும் சொல்வார்கள்!

உடலுக்கு ஒத்துவராத உணவு உண்ணும் நாட்களிலோ மற்ற நாட்களிலோ காலையில் அல்லது இரவு சுத்தமான தண்ணீரைமட்டும் பயன்படுத்தி நாமே வயிற்றைச் சுத்தம் செய்துகொள்ளலாம்!

அதற்கு இது சிறந்த உபகரணமாகப் பயன்படுகிறது.

இயற்கை மருத்துவத்தில் முக்கியமாகப் பயன்படுத்தப்படுவது இந்த இயற்கை எனிமா!

எந்த நோயானாலும் உணவை நிறுத்தி எனிமா எடுத்துக் கொள்ள வேண்டும்.

வயிறு காலியானாலே நோயின் தீவிரம் குறையும்.

சுத்தமான குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரை எனிமா கேனில் நிரப்பி செருகி (nozzle) மூலம் ஆசனவாயில் நுழைத்து சிறிது முன் சாய்ந்தோ அல்லது குனிந்தோ நிற்பதின் மூலமாகவோ அல்லது பக்கவாட்டில் படுத்திருப்பதின் மூலமாகவோ, கேனில் நிரம்பிய நீர் மலக்குடலில் செல்லும்.

சிறிது நேரம் நீரை மலக்குடலுக்குள் நிறுத்தி (ஓரிரு நிமிடங்கள் கழித்து) பின்னர் வெளியேற்றினால் மலம் நீருடன் சேர்ந்து பீய்ச்சிக் கொண்டு வெளி வரும்.

வயிற்றில் கிருமிகள் இருப்பின், வேப்பிலையை வேகவைத்து ஆறவைத்த நீர் (அ) ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றில் நீர் கலந்தும் எனிமா கேனின் உதவியுடன் மேற்குறிப்பிட்ட முறையில் உள்ளே ஏற்றி வெளியேற்றலாம்.

இந்த முறையால் மலச்சிக்கல், வயிற்றுச் சூடு, வயிற்று வலி, பேதிகள், உணவு சீரணம் ஆகாமை ஆகியவற்றிற்கு எனிமாவே கைகண்ட மருந்து"என்கிறார்.

கடுமையான வயிற்றுப் போக்கு இருக்கும் போது எனிமா கொடுப்பதின் மூலம், பல தடவை பேதியாவதை தடுப்பதோடு, உடலின் சுரப்பு நீர்கள் வெளியேறுவதையும் தடுக்க இயலும்
எனிமா சிகிச்சை என்பது ரிஷிகளால் பண்டைய காலம் தொட்டே கண்டுபிடிக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்ட ஒரு முறையாகும்.

அஷ்டாங்க யோகத்தில், க்ரியாக்கள் என்று சொல்வார்கள். பலவகையில் உடலை சுத்தப்படுத்தும் முறைகளை ஷத்க்ரியாக்கள் என்று கூறுவார்கள்.

அதில் ஒன்று பஸ்திக்ரியா என்பது பஸ்திக்ரியாவின் நவீனப்படுத்தப்பட்ட முறையே எனிமா கேன் ஆகும்.

"ஆரோக்ய வாழ்வுக்கு இயற்கை மருத்துவமுறை அவசியம்"

"இதை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்"

"ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்"

Saturday, November 19, 2016

*யார், யார் எப்படி பேசுவார்கள்

..?*

*கிரிக்கெட் வீரர்*
"ஓவரா" பேசுவார்

*போட்டோகிராபர்*
"டெவலப் பண்ணி" பேசுவார்

*ரவுடி*
"அடிச்சுப்" பேசுவார்

*ஹோட்டல் சர்வர்*
"சூப்"பரா பேசுவார்

*வக்கீல்*
"பீஸ்புல்லா" பேசுவார்

*ஃபாஸ்ட் ஃபுட் ஓனர்*
"காரசாரமா" பேசுவார்

*ஐஸ் விக்கிறவர்*
"குளிரக் குளிரப்" பேசுவார்

*டெய்லர்*
"கட் பண்ணிப்" பேசுவார்

*பூக்கடைக்காரர்*
வார்த்தையை "அளந்து" பேசுவார்

*டயட்டீஷியன்*
"உப்பு சப்பில்லாமல்" பேசுவார்

*பேங்க் மேனேஜர்*
"இண்ட்ரஸ்டா" பேசுவார்

*பியூட்டீஷியன்*
"அழகாப்" பேசுவார்

*எலக்ட்ரீசியன்*
"ஷாக்" அடிச்சமாதிரி பேசுவார்.

*கசாப்புக் கடைக்காரர்*
"வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுன்னு" பேசுவார்

*ஸ்வீட் கடைக்காரர்*
"இனிக்க இனிக்கப்" பேசுவார்

*மீன் வியாபாரி*
"நாறடித்து" பேசுவார்

*கண்டக்டர்*
"நடந்து நடந்து" பேசுவார்.

*டிரைவர்*
"நிறுத்தி நிறுத்தி" பேசுவார்.

*பால் வியாபாரி*
பழம் நழுவி "பாலில்" விழுவது போல் பேசுவார்.

*பெர்ஃயூம் கடைக்காரர்*
"மணக்க மணக்க" பேசுவார்.

*டீ மாஸ்டர்*
"சூடா"க பேசுவார்.

*கணக்கு வாத்தியார*
"கூட்டி குறைத்து" பேசுவார்.

மேலே சொன்ன அத்தனையும் ஒருத்தன் பேசுவான்...

அவன்தான் "அரசியல்வாதி"...